ஏகாம்பரஸ்வரர் கோவிலில் தெப்ப உற்வசவம்!
திருவாரூர்: கொள்ளுமாங்குடி அருகே கீழக்கடுவன்குடி ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ் வரர் கோவிலில் நேற்று முன் தினம் இரவு தெப்ப உற்வசவம் நடந்தது. இதில் ஆயிரகணக்கானவர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், கொள்ளுமாங்குடி அருகே கீழக்கடுவன்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் கோவில் உள் ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் துவங்கி சுவாமிகளுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடந்து வந்தது.நேற்று முன் தினம் இரவு சித்ராப வுணர் நமி யை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அதன் பின் உற்சவர்களான ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் தனித் தனியா க அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்தப்பின் தெப்பத்தில் மின் விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் உற்வசவம் வெகுவி மர்சியாக நடந்தது. சிவத்தொண்டு அமைப்பின் தலைவர் டாக்டர் வெற்றிச்செல்வம்,செயலர் அன் புச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். விழாவில் ஆயிரகணக்கான பக்த ர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட் டது. திருவாரூர் மாவட்டத்தில், தியாகராஜர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி மற்றும் கீழக்கடுவன்குடி ஸ்ரீகாமாட்சி சமேத ஏகாம்பரஸ்வரர் கோவில் என மூன்று இடங்களில் மட்டும் தெப்ப உற்சவம் நடக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.