உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!

காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம்  காமாட்சி உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சி வனுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின் காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மலர்மாலைகள் சாற்றினர்.  உலக நலன் வேண்டி 108 வெள்ளிக்காசுகளால் பூஜைகள் நடந்தது. வேதபாராயணத்துக்குப்பின், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.ஏராளமான  பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழி பட்டபின், சுமங்கலி தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !