அனுமந்த வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாள் வீதியுலா
ADDED :3810 days ago
பொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், அனுமந்த வாகன வீதியுலா நடந்தது.பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில், பிரம்மோற்சவ விழா, கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை ஆகியவை நடந்தன.பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை, அனுமந்த வாகனத்தில், திருவாயற்பாடி அரிஅரன் பஜார், தண்டபாணி நாடார் தெரு உள்ளிட்ட மாடவீதிகள் வழியாக, பெருமாள் வீதியுலா நடந்தது.நாளை சந்திப்பு: பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமாளும், ஒரே சேர சந்தித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த அரிய நிகழ்ச்சி, சந்திப்பு திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான நாளை இரவு, 1:00 மணிக்கு, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.