உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் அஷ்டபுஜ பெருமாள்!

கருட வாகனத்தில் அஷ்டபுஜ பெருமாள்!

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் சித்திரை பிரமோற்சவத்தில், நேற்று கருடசேவை வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த சனிக்கிழமை துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, கருடசேவை விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணியளவில், சிறப்பு பூஜைகளுக்கு பின், கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின், டி.கே.நம்பி தெரு, அண்ணா தெரு, வரதராஜபெருமாள் கோவில் மாடவீதி வழியாக வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அவர் அருள்பாலித்தார். கோவில் திரும்பிய பெருமாள், இரவு அனுமந்த வாகனத்தில் வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !