ஸ்ரீவில்லிபுத்தூர் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்!
ADDED :3809 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சித்ராபவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலை ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு,சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.பின்னர் ஆண்டாள் நீல பட்டு உடுத்தி சேஷ வாகனம்,ரெங்கமன்னார் பச்சை பட்டுஉடுத்தி குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து,ஆத்துக்கடை வீதியில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு வையாலி சேவை நடந்தது. ராஜாபட்டர், சுதர்சன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.