மாரியம்மன் கோவில் பூக்கரக ஊர்வலம்
ADDED :3905 days ago
ஓசூர்: ஓசூர் ராம்நகர், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 21ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பலர் தீச்சட்டி, மாவிளக்கு, பூக்கரகம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, பூக்கரக ஊர்வலம் நடந்தது. ஓசூர் அண்ணா நகர், பாரதி நகர், பாரதிதாசன் நகர், பழைய ஏ.எஸ்.டி.சி., அட்கோ, ராம்நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கரகம் எடுத்து வந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோட்டை மாரியம்மனை வழிபட்டு சென்றனர். இன்று அலகு குத்தி ஊர்வலமாக செல்லும் பக்தர்கள், கோட்டை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.