குணசீலத்தில் தெப்பத்திருவிழா
ADDED :3804 days ago
திருச்சி: குணசீலம் பிரஸன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நாராயணனை போற்றும் வகையில், நேற்று தெப்போற்சவம் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் இருந்து இரவு வரை, மூலவர் முத்தங்கி சேவை நடந்தது. இரவு, 7 மணிக்கு பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி ஸகஸ்ர தீபாலங்கார சேவையில் அருள்பாலித்தார். இரவு, 8 மணிக்கு பெருமாள் தாயாருடன் பாபவினாஸ தீர்த்த குளத்தில், தெப்பத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். இரவு, 10 மணிக்கு கண்ணாடி அறை சேவை நடந்தது.