உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துறையூர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

துறையூர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

துறையூர்: துறையூரிலுள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. துறையூர்- ஆத்தூர் சாலையில் உள்ள சத்தியநாராயண பெருமாள் கோவிலில் பவுர்ணமி சத்தியநாராயண பூஜை, திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருளினார். துறையூர் வேணுகோபால ஸ்வாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு ஸ்வாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். துறையூர் வேம்பழகு மாரியம்மன் கோவிலில், கஞ்சி வழங்கும் விழா நடந்தது. இரவு புஷ்ப மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா வந்து அருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !