பெருமாள் ஆடிய நடனம்!
ADDED :3915 days ago
சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல, பெருமாள் நடனமாடும் தலம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பெருங்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். நவதிருப்பதி மற்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., துõரத்தில் உள்ளது., உற்சவர் மாயக் கூத்தர், தாயார்கள் அலர்மேல் மங்கை, குளந்தைவல்லி இங்குஅருள்பாலிக்கின்றனர். பெருமாளும் அவள் அன்பை ஏற்று மணம் புரிந்து கொண்டார். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பல மாயங்கள் செய்து, நாட்டியமாடிஅவனைசம்ஹாரம் செய்தார். கூத்தாடியதால் இப்பெருமாளுக்கு மாயக்கூத்தன் என்ற பெயர் ஏற்பட்டது.