இரத்தின லிங்க பூசையும் பயனும் - விக்கிரக அபிடேக காலம்!
ADDED :3858 days ago
மாணிக்க பதுமரா கமும்நல்ல வாழ்வுதரும்
வச்சிரவி லிங்க பூசை
மாற்றலரை மாய்க்கும்வயி டூரியம் அரம்பைசுக
மருவுமக வும்ப டிகநிர்
மாணித்தி லிங்கபூ சனையாற்றின் மெய்ஞ்ஞானம்
மரகதம்நல் யோக நல்கும்
மணிநீல நிதிதரும் பவளமோ நிறைசகல
வாழ்வு நல்கோ மேதகம்
வேணித்த மகிழ்அழகு நல்கும்அனு தினமுமே
மிளிர்சி லைக்குஅபி டேகமாம்
மிக்கபூ ரணையுலோ கத்துருவி லோவியம்
வியன்படா தியவ டிவதில்
சேணிலகும் அபிடேகம் ஆடிமுன் புரிகெனச்
செப்பி னாய்மறை யாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகசீ சநட ராசனே.