புத்தர் மற்றும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
ADDED :3807 days ago
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவர் பிளம்பராக பணிபுரிகிறார். இவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, 5.5 அடி ஆழத்தில் சத்தம் கேட்டது. அப்போது அதனை மண்ணை எடுத்துவிட்டு பார்த்தபோது, புத்தர் மற்றும் ஐம்பொன் சிலைகள் என 20 கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலையை எடுத்து சென்றனர். இவற்றின் எந்த கால கட்ட சிலைகள் என்பது இனி தெரியவரும்.