உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலையில் சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு

சுவாமிமலையில் சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள வரசித்தி நாககன்னிகா பரமேஸ்வரி கோவிலில், காவிரி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். ஆராதனை, கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. பாணாதுறை முக்காளியம்மன் கோவிலுக்கு காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள், கரகம், பால்குடலம், காவடி எடுத்து வந்தனர். கல்யாணராமய்யர் பேட்டையில் உள்ள தாழமுத்து மாரியம்மன் கோவிவிலுக்கு, பகவத் படித்துறையிலிருந்து பால்குடம், சக்தி கரகம் எடுத்து வந்தனர். கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், பால்குட விழா டைபெற்றது. அரசலாற்றாங்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சக்தி கரகம், அக்னி கொப்பரை, பால்குடங்கள், அலகு காவடி எடுத்து தாராசுரத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்றனர். இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !