பைரவநாத ஸ்வாமி கோவில் சித்திரை தேரோட்டம்
ADDED :3808 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் உள்ள பைரவநாத ஸ்வாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடந்தது நிறைவு நாளான்று சித்திரை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, ஸ்வாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, முள்ளி நதியில் தீர்த்தவாரியும் நடந்தது. பஞ்சாயத்து தலைவர்கள் பழனியப்பன், அமிர்தகடேசன், வாய்மேடு குணசேகரன் உட்பட ஏராளமானோர் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.