காரைக்கால் அய்யப்பன் கோவிலில் பிரம்ம கலச பூஜை!
ADDED :4115 days ago
காரைக்கால் : காரைக்கால் அய்யப்பன் கோவிலில் பிரம்ம கலச பூஜை நடந்தது. காரைக்கால் பச்சூர் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி தினத்தை முன்னிட்டு நேற்று சபரிமலை பாரம்பரிய தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் காலை கணபதி ஹோமம் தொடங்கியது.பிரம்ம கலச பூஜை, மாளிகைப்புரத்து அம்மன் பூஜை, அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 11 மணிக்கு அய்யப்பனுக்கு புஷ்ப அலங்காரம் தீபாராதனை நடந்தது.