உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா: 12ம் தேதி தேரோட்டம்

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா: 12ம் தேதி தேரோட்டம்

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா மங்கள இசையுடன் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 11ம் தேதி தங்க சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்ட இந்த தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது. தேரோட்டத்தின் போது அடைக்காக போடப்படும் தேர் மரச்சக்கைகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்துவருகிறது. நெல்லை டவுன் 4 ரதவீதிகளும், ஐந்து ‌தேர்‌களையும் வரவேற்கும் விதத்தில் களை கட்ட துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !