புதுக்குப்பத்தில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :3809 days ago
கடலூர்: கடலூர், புதுக்குப்பம் சாமிப்பிள்ளை நகரில் உள்ள விசித்திர சித்தி விநா யகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபி÷ ஷகத்தையொட்டி, இதற்கான பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமம், யாகசால பி ரவேசம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று (9ம் தேதி) காலை கோ பூஜை, தன பூஜை, அஸ்த்ர ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை (10ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.