சிங்கனூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3811 days ago
திண்டிவனம்: சிங்கனூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மறுநாள் காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, 10:15 மணிக்கு, ஜெயகணபதி, திரவுபதியம்மன், முத்தாலம்மன் மற்றும் பட்டாபிராமன் கோவில்களில், யாகசாலை புனித கலச நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை சுரேஷ் அய்யர் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஸ்தபதிகள் முன்னூர் கிராமம் பெருமாள், எழில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.