மாந்தோப்பு அங்காளஈஸ்வரி கோயிலில் வெள்ளி தகடில் ரிஷப வாகனம்!
காரியாபட்டி: பல நூறு ஆண்டுகளுக்கு முன் மான்கள் கூடியிருந்த இடம்தான், காலப்போக்கில் மாந்தோப்பு என பெயர் பெற்றது. மான்களை வேட்டையாட சென்ற வேடுவனுக்கு, சிவன் சுயம்பாக காட்சி அளித்து, வழிபட வேண்டியதன் பேரில், அங்காளபரமேஸ்வரி வாலகுருநாதசுவாமி கோயில் உருவானது. குடிசை வேய்ந்து வழிபட்ட வந்த இக்கோயில், ராணிமங்கம்மாள் தரிசனம் செய்து, கல்லு மண்டபம் கட்டினார். கேட்ட வரங்களை கொடுப்பதுடன், திருமணம் ஆகாத பெண்கள் வேண்டினால் திருமணம் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், களரியின் போது வேட்டைக்கு செல்லும் சுவாமி எரிபூஜையில் கிடைக்கும் பிரசாதத்தை பெற்று சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு நன்மைகளை தரும் இக்கோயில் பழங்கால கோயிலாக இருந்தாலும், பக்தர்களின் ஆதரவால் பொலிவுடன் காணப்படுகிறது.இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திகடனுக்காக செலுத்திய வெள்ளியை ரிஷப வாகனத்திற்கு தகடு பொறுத்தும் பணி நடைபெற்று,மே 22ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுப்பாநாகுலு கோயில் நிர்வாகி: மிகவும் சக்திவாய்ந்த, வேண்டிய வரம் கொடுக்கும் தெய்வம். வியாபாரி ஒருவர் இக்கோயிலில் வழிபட்டு, நல்ல லாபம் பெற்றதன் காரணமாக மும்பையிலிருந்து பலிங்கு பிள்ளையார் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் குறைகளை சொல்லி தரிசனம் செய்கிறார்கள். குறைகள் நிவர்த்தியானதும், நேர்த்திக்கடனுக்காக செலுத்தும் வெள்ளியை ரிஷப வாகனத்திற்கு தகடாக பொறுத்தும் பணி செய்து வருகிறோம். இன்னும் பல்வேறு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். குடும்ப கஷ்டங்களை போக்க ஒரு முறை இக்கோயிலில் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும், கஷ்டங்கள்நீங்கம் என்பது அபார நம்பிக்கை, என்றார்.