லக்ஷ்மி குபேரர் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம்!
ADDED :3848 days ago
திண்டிவனம்: கோவடி கிராமத்தில் உள்ள லக்ஷ்மி குபேரர் ரூபாய் நோட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திண்டிவனம் புதுச்சேரி ரோட்டில் உள்ள மொளசூர் அடுத்த கோவடி கிராமத்தில் உள்ள சித்ரலேகா சமேத லக்ஷ்மி குபேரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து நடந்து வரும் மண்டல பூஜையை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு மகா அபிஷேகமும், ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரமும் நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சிவ முருகன் மற்றும் விஜயலட்சுமி குபேர் அறக்கட்டளை குழுவினர் செய்திருந்தனர்.