முண்டவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா
ADDED :3800 days ago
நாகர்கோவில் : முண்டவிளை ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா நேற்று நடைபெற்றது. முதல் நாள் விழாவில் காலையில் கணபதிஹோமம், கலசபூஜை, பொங்கல் வழிபாடு மதியம் உச்சிகால அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் அம்மன் புஷ்பவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, நள்ளிரவில் ஒடுக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.