சிவாலயப் பிரதிட்டை
ADDED :3838 days ago
புண்ணியர்கள் நற்பொருள்சி வாற்பிதமி தென்றே
புகன்றுதவ அதனை யாசான்
பொறையுடன் கைக்கொண்டு பங்குபத் தாக்கியப்
பொருளினொரு பங்க தனையே
நண்ணுமபி டேகந்த னக்குவேள் விக்கொன்று
நவிலோம திரவி யத்தில்
நாடுபங் கொன்றுதே சிகர்தமக் கொருபங்கு
நல்லமூர்த் திக்கி ருமடங்(கு)
எண்ணிரிய மறைமந்தி ராதிய செபத்தினுக்
கியலுமொரு பங்கு தானம்
ஈதலுக் கொருமடங்(கு) அன்பர்போ சனமதற்(கு)
ஏற்றவொரு பங்கி னளவே
திண்ணியர்கள் ஓதுநை வேத்தியத் திற்கொன்று
சிந்தியந் தனிலு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.