வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :3792 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில், வைணவ கோவில்களில் தொன்மை வாய்ந்த கோவிலாக, வைகுண்ட பெருமாள் கோவில் விளங்குகிறது. இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலின் பிரம்மோற்சவம், ஆண்டு தோறும் சித்திரை மாத இறுதியில் துவங்கும். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம், நேற்று காலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை, 7:00 மணியளவில், வைகுண்டபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பர வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.