உடுமலை அமராவதி அம்மன் கோவில் திருவிழா!
ADDED :3844 days ago
உடுமலை :அமராவதி நகர், அமராவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி சப்பர ஊர்வலம் நடந்தது. உடுமலை, அமராவதி நகரில் உள்ள அமராவதி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அபிசேக பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து, மஞ்சள் நீராட்டுதலுடன், சப்பர ஊர்வலம் நடந்தது. அமராவதி அணைப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் புறப்பட்ட சப்பரம், கரட்டுப்பதி, பெரும்பள்ளம், ஒன்பதாறு செக்போஸ்ட் வரை சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல், 3:00 மணிக்கு, பூவோடு எடுக்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு, மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.