வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா!
பெங்களூரு: பாரதி நகர், திம்மையா சாலை வெங்கடேச பெருமாள் சன்னிதி மகாகும்பாபிஷேக விழா, வரும், 18ம் தேதி துவங்குகிறது. விழா நிகழ்ச்சிகள், முதல் நாளான, 18ம் தேதி மாலை, 5:00 மணியில்இருந்து துவங்குகின்றன. மங்கள வாத்தியம், விஸ்வசேனா ஆராதனை, பகவத் வாசு தேவா புண்ணியாஹம், ஹோமம் நடக்கிறது; தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளான, 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மேல்கோட்டை ஜீ யர் ஸ்ரீஸ்ரீ யதுகிரி எத்திராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். பின், கோவிலில் முதியோர் இல்லம், ஆதர வற்றோர் இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. மாலை, ஆஸ்டின் டவுன் ராமானுஜ மடம் டிரஸ்ட் பக்தர்கள் மற்றும் வண்ணாரபேட்டை ஆண்டாள் சன்னிதி வைஷ்ணவ பக்தர்களால், நாலாயிர திவ்யபிரபந்த சேவையும் நடக்கிறது. மூன்றாம் நாளான, 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பெருமாள் அலங்கார ரதத்தில், முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறார். மாலை, 4:00 மணிக்கு, நாலாயிர திவ்யபிரபந்த சேவை, பஜனை நடக்கிறது. இதன்பின், முக்கிய பிரமுகர்கள், ஆலய அடியார்கள் கவுரவிக்கப்படுகின்றனர். பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெருமாறு, வெங்கடேச பெருமாள் சன்னிதி மானேஜிங் டிரஸ்டியும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி அழைப்பு விடுத்து உள்ளார்.