உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கப் பிரதிட்டைக்குரிய பதினெட்டு வகையான கிரியைகள்

சிவலிங்கப் பிரதிட்டைக்குரிய பதினெட்டு வகையான கிரியைகள்

ஓதரிய லிங்காதி பிரதிட்டை புரியின்ஈர்
ஒன்பான் எனும்கிரி யைமுன்(பு)
உறுமிருத் சங்கிரணம் அங்குரார்ப் பணமணிகள்
உய்த்தருள் நியாச முடனே
கோதில்நய னோன்மீல னம்விம்ப சுத்தியது
கூறுந கர்வல மேகுதல்
குளிருதக வாசமொடு இரட்சைபந் தனமணிகொ
ளும்வாத்து பூசை யானைந்(து)
ஏதமில் உருத்திர மகாமண்ட பம்சுத்தி
யெழிலுறு சமற்கா ரம்அக்
கினியச னம்வேள்வி தாபனம் பந்தனம்
இணங்குமந் திரநி யாசந்
தீதில்அபி டேகம்வி வாகாந்த முறையெனச்
செப்பி னாய்மறை யாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !