1000 ஆண்டுகளுக்குமேல் பழமையான பெரியாவுடையார் கோயிலில் யாகபூஜை
ADDED :3800 days ago
பழநி: பழநியில் 1000 ஆண்டுகளுக்குமேல் பழமையான பெரியாவுடையார் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றிரவு முதல் சிறப்பு யாகபூஜைகள் துவங்கியுள்ளது. பழநி கோதைமங்கலம் சண்முகநதிக்கரை அமைந்துள்ள பெரியாவுடையார் கோயிலில் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு நேற்றிரவு 8 மணிக்கு விநாயகர்பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடந்தது. மே 22ல் காலை 8.30 மணிக்கு பெரியாவுடையார் மற்றும் பரிவாரதெய்வங்கள் தெட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு, வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் முன்னிலையில் நடக்கிறது.