திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்த விழா பொங்கல்!
ADDED :3796 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் மே 9ல் காப்புக் கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து, இரவில் திருக்குளத்தை அம்பாள் பவனி வந்தார். மே 12ல் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். நேற்று நிறைவு நாளாக காலை மூல சன்னதியில் பூமாயி அம்மன் நடுநாயகமாக அமைந்திருக்கும், சப்த மாதர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு முன்னிலையில் 151 பானைகளில் பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர்.