உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் பெருமாள் கோவில் உற்சவ திருவிழா

சூலுார் பெருமாள் கோவில் உற்சவ திருவிழா

சூலுார் : நாகம்மநாயக்கன்பாளையம் கானியப்ப மசராய பெருமாள் கோவில் ஏழாம் ஆண்டு உற்சவ திருவிழா நேற்று துவங்கியது. சூலுார் அடுத்த பட்டணம் நாகமநாயக்கன்பாளையத்தில் உள்ள கானியப்ப மசராய பெருமாள் கோவில் பழமையானது. இங்கு ஏழாம் ஆண்டு உற்சவத் திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இன்று காலை, 10:00 மணிக்கு அம்மன் அழைப்பு, சுவாமி ஆற்றுக்கு செல்லுதல், நாளை காலை, 6:00 மணிக்கு கரகம் ஆற்றில் இருந்து புறப்படுதலும் நடக்கின்றன. மதியம் 12:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும், பிற்பகல் 3:00 மணிக்கு மா விளக்கு மற்றும் பொங்கல் பூஜையும் நடக்கின்றன. 21ம்தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !