உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் வைகாசி தேர்த்திருவிழா மே 24ல் துவக்கம்

கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் வைகாசி தேர்த்திருவிழா மே 24ல் துவக்கம்

சேலம் : சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில், வைகாசி தேர்த் திருவிழா மே, 24ல் துவங்குகிறது. சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலின் வைகாசித் தேர்த் திருவிழா, மே, 24ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.மே, 26 துவங்கி, ஜூன், 1 வரையில் காலையில், தினம் தோறும் வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. மே, 26 மாலை, சிம்ம வாகனத்திலும், மே, 27 மாலை, ஹனுமந்த வாகனத்திலும், மே 28 மாலை, சேஷ வாகனத்திலும், மே 29 மதியம் திருக்கல்யாண உற்சவமும், மாலையில் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.மே, 30 மாலை, யானை வாகனத்தில் திருவீதி உலாவும், மே, 31 மாலை புஷ்ப வாகனத்தில் திருவீதி உலாவும், ஜூன், 1 மாலை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.ஜூன், 2ம் தேதி காலை, திருத்தேர் ரதாரோஹணத்தை தொடர்ந்து காலை, 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலையை அடைந்ததும், வண்டிக்கால உற்சவம் நடக்கிறது. ஜூன், 3ல் தீர்த்தவாரி உற்சவமும், ஜூன், 8ல் சத்தாபரணம், ஜூன், 9ல் வசந்த உற்சவம் ஆகியன நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !