கொடைக்கானல் குறிஞ்சியாண்டவருக்கு மலர் வழிபாடு
ADDED :3909 days ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவருக்கு மே மாதங்களில் நடைபெறும் மலர் வழிபாட்டு விழா சிறப்பு பூஜையுடன் நேற்று நடந்தது. இவ் விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு குறிஞ்சியாண்டவரை வழிபட்டனர். பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயிலாக குறிஞ்சியாண்டவர் கோயில் உள்ளது. விழாவையொட்டி புதுவிதமான கண்ணாடியில் நவதானியங்களை கொண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பல வண்ண மலர்களில் கோலமிட்டு இருந்தனர். டைக்கானல் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுத்துரை உட்பட முக்கிய ரமுகர்கள் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.