திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்
ADDED :3794 days ago
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கொடியேற்றதுடன் நேற்று துவங்கியது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழா நேற்று (19 ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 29ம் தேதி காலை 11:00 மணிக்கு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. 31ம் தேதி மதியம் 1:00 மணிக்கு திரவுபதியம்மன், அர்ச்சுணன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.