தொங்கும் தூண்கள்!
ADDED :3956 days ago
தர்மபுரி மல்லிகார்ஜுனர் திருக்கோயில் நவரங்க மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில், இரு தூண்களின் அடிப்பகுதி பூமியைத் தொடுவதில்லை. ஒரு குச்சியை தூணின் ஒரு பக்கத்தில் நுழைத்து மறுபக்கத்திலிருந்து எடுத்துவிட முடியும். இத் தொங்கும் தூண்கள் ஒவ்வொன்றும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டவை.