உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான பெரியாவுடையார் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா!

பழமையான பெரியாவுடையார் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா!

பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக, கும்பகோணத்திலிருந்து புதிய கலசங்கள் வந்துள்ளன. பழநியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சேரன்,சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிசெய்த கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் உள்ள பெரியாவுடையார் கோயிலில் நாளை(மே 22) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி திருச்செங்கோடு, கும்பகோணம், காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து சிவாச்சாரிகள் வந்துள்ளனர். தொடர்ந்து வேதபாரண்யம், திருமுறை மந்திரங்கள் ஓதுகின்றனர். பிரத்யேக யாகசாலைகள் அமைக்கப்பட்டு பழநிகோயில் ராஜபண்டிதர் அமிர்தலிங்க குருக்கள், ஸ்தானீகர் செல்வசுப்ரமண்ய சிவாச்சார்யர் தலைமையில் 51 சிவாச்சாரியர்கள் தொடர்ந்து யாகவேள்வி பூஜை செய்கின்றனர். நேற்று பரிவாரதெய்வங்களுக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணத்திலிருந்து புதிதாக கோபுரக்கலசங்கள் வந்துள்ளன. தொடர்ந்து இன்று 4ம்காலயாகபூஜையும் நாளை அதிகாலை 4.30மணிக்கு ஆறாம் காலபூஜை துவங்கி பிம்பசுத்தி காப்புகட்டுதல் செய்து, காலை 8.30 மணிக்கு பெரியாவுடையார், பரிவார விமானங்களில் மகாகும்பாபிஷேகம், அதைதொடர்ந்து காலை 8.45 மணிக்கு மூலவர் பிரகதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமிபுறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !