குமரகோட்டம் கோவில் பிரம்மோற்சவம் 23ல் துவக்கம்
ADDED :3793 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் வரும் 23ம் தேதி துவங்குகிறது. காஞ்சிபுரம் குமரகோட்டம் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் துவங்கும். அதன்படி, வரும் 23ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவம் ஜூன் மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. 23ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. பிரம்மோற்சவ நாட்களில், சுவாமி புறப்பாடு காலை 8:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் நடைபெறும்.