உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

வடலூர்: குறிஞ்சிப்பாடி அடுத்த குருவப்பன்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குறிஞ்சிப்பாடி அடுத்த  குருவப்பன்பேட்ø கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் புரனமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த  18ம் தேதி மாலை அனுக்ø<ஞ விக்னேஸ்வரர்  பூஜை,  வாஸ்து சாந்தியை தொடர்ந்து யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக  பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு மூலவர் சித்த விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்  நடைபெற்றது.  தொடர்ந்து மூலவர் சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !