உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கபெருமாள் பிரம்மோற்சவம்: அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவு!

சிங்கபெருமாள் பிரம்மோற்சவம்: அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவு!

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம சுவாமிகள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி, அடிப்படை வசதிகளை செய்து தர, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஒருங்கிணைப்பு கூட்டம் சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில், வரும் 23ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கி, ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா தொடர்பாக, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைப்பு கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில், நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வட்டாட்சியர் பஷீரா, செயல் அலுவலர் கேசவராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், சாலை, குடிநீர், சுகாதாரம் ஆகிய வசதிகளை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், இரு நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவும், திருவிழா காலங்களில், போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, உத்தரவிட்டார்.

நவீன கேமரா: காவல் ஆய்வாளர் இளங்கோவன் பேசுகையில், திருவிழா காலங்களில், திருட்டு சம்பவத்தை தடுக்க, நவீன கேமரா மற்றும் குற்றப்பிரிவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !