உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வ சேக்கிழார் குருபூஜை விழா!

தெய்வ சேக்கிழார் குருபூஜை விழா!

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், வரும் 23ம் தேதி தெய்வ சேக்கிழார் குருபூஜை விழா நடக்கிறது. திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் 6ம்  ஆண்டு துவக்க விழா மற்றும் 14ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் குருபூஜை விழா, விருத்தாசலம் சன்னதி வீதியில் உள்ள பக்தவச்சலு அனுசுயா  மண்டபத்தில் வரும் 23ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு மங்கள இசை, விடை கொடியேற்றுதல், குத்துவிளக்கு ஏற்றுதல், 6:30 மணிக்கு  தெய்வச் சேக்கிழார் குரு பூஜை, 7:00 மணிக்கு சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் சிவபூஜை நிகழ்ச்சி, 9:00 மணிக்கு தெய்வச் சேக்கிழார் வீதியுலா  நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !