மதுரையில் தேவார திருவாசக தமிழிசை மாநாடு!
ADDED :3791 days ago
மதுரை: மதுரையில் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் ஜூன் 20, 21, 22ல் தேவார திருவாசக தமிழிசை மாநாடு நடக்கிறது. அறங்காவல் குழுவினர் கூறியதாவது: மாநாட்டில் தேவாரம், திருவாசகம் தொடர்பான இசை, ஆராய்ச்சி, ஆய்வு கருத்தரங்கம் மற்றும் 500 மாணவர்கள் பங்கு பெறும் தேவார, திருவாசக தமிழிசை நிகழ்ச்சி நடக்கிறது. இலவச தேவார இசைப்பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ், பட்டம் வழங்கப்படும். இசையில் ஆர்வம் உள்ளோர் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ‘திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசை கல்வி அறக்கட்டளை, மேலமாசிவீதி, மதுரை’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றனர். தொடர்புக்கு 94439 30540.