உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வினாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!

அத்தி வினாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் அத்திவினாயகர், மகாதேவி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி வாணியர் வீதியில் உள்ள அத்தி  வினாயகர் மற்றும் மகாதேவி கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை யொட்டி காலை 9.35 மணிக்கு சந்திரசேகர குருக்கள் தலைமையில்  கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 9.45 மணிக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலயவாமிகள் வினாயகர் மற்றும் மகாதேவி கோவில்  கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் செய்தார். விழா ஏற்பாடுகளை  ஆலய தர்மகர்த்தாக்கள் மணி, பெரியசாமி, பாலாஜி, சங்கர் ,ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !