உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., கும்பாபிஷேகத்தில் ஆளில்லா குட்டி விமானம்

ஸ்ரீவி., கும்பாபிஷேகத்தில் ஆளில்லா குட்டி விமானம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியில் ஆளில்லா குட்டி விமானம் ஈடுப்படுத்தப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இதில் நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குபின்பு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். டி.ஸ்.பி.,தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.ஆளில்லா குட்டி விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தது. விழாவில் நாங்குனேரி ஜீயர், ஸ்ரீரங்கம் ஜீயர், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் சீனிவாசராஜீ, சிறப்பு அலுவலர் சேஷாத்ரி, மாவட்ட நீதிபதி தாரணி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, உதவி ஆணையர் கவிதா பிரியதர்சினி, போலீஸ் ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், விருதுநகர் கலெக்டர் ராஜாராமன், எஸ்.பி., மகேஷ்வரன், டி.ஆர்.ஓ. முனியசாமி, சப்கலெக்டர் அமர்குஷ்வா, திருப்பணிக்குழு தலைவரான ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா, தக்கார் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ராம்கோ நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !