வாலகுருநாதசுவாமி கோயிலில் ரிஷப வாகன வெள்ளோட்டம்
ADDED :3793 days ago
காரியாபட்டி: காரியாபட்டி மாந்தோப்பில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதசுவாமி கோயில் உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெள்ளிகளை, கொண்டு ரிஷப வாகனத்திற்கு தகடு செய்து பொறுத்தும் பணி முடிந்தது. வைகாசி விழாவையொட்டி 24ல் வீதி உலா வரும் நிகழ்ச்சிக்காக, நேற்று ரிஷபவாகனம் வெள்ளோட்ட வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை ஆண்டாள்புரம் சாய் பாபா கோயில் காரியதரிசி டாக்டர் பிரபு, தலைவர் ஜீனத் சாய், பொறுப்பாளர் சுரேஷ், பிரபாகரன், சுப்பாநாகுலு, ஊராட்சி தலைவர் சரவணன் கலந்து கொண்டனர்.