வீரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
உத்தமபாளையம்: பண்ணைப்புரம் கிராமம் கரியணம்பட்டியில் உள்ளது வீரேஸ்வரர் கோயில் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) கத்தேவாரு குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தது. புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பிறந்த வீட்டுபிள்ளைகள் அழைப்பு, இரண்டாம் கால யாகபூஜைகள், தனபூஜை, யந்திர பூஜை, ஸ்தூபி கலசம் மற்றும் சுவாமி பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை மூன்றாம் கால யாகபூஜைகள் துவங்கி கடம் புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. புனிதநீர் கலசங்களில் ஊற்றப்பட்டது. சிறப்புபூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் ஏகாம்பர சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் மனையடி ஜோதிடர் ஜோதீஸ்வரன், வக்கீல் ராதாகிருஷ்ணன், ராகுலன், பத்திர எழுத்தர் சிக்கையன், ஆசிரியர் சுப்ரமணியன், திருப்பணிக்குழு தங்கராஜ், ராணா, வீரபாசுகரன், வீரமோகன், குமரேசன், சுப்ரமணி, கரியனம்பட்டி ராஜாராம், முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜெயக்குமார், ராசிங்காபுரம் பிரபாகரன், விக்ரமன், முருகன், ராணா, அதிரூபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் மணி, துணை தலைவர் சுருளிராஜன், செயலர் சதீஷ், துணைசெயலர் பிரபு, பொருளாளர் ராஜூ செய்திருந்தனர்.