உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் விசாகத்திருவிழா கொடியேற்றம்!

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் விசாகத்திருவிழா கொடியேற்றம்!

சேத்தூர்: பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி உடனுறை தவம்பெற்ற நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.சுவாமியும் அம்பாளும் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.7ம் திருநாளில் சுவாமி,அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 31ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.விழா ஏற்பாட்டை பரம்பரை அரங்காவலர் துரைராஜசேகர்,செயல் அலுவலர் ராமராஜா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !