திருப்பதியில் மொட்டை போடும் நாவிதர்களுக்கு பதவி உயர்வு!
ADDED :3897 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் மொட்டை போடும் நாவிதர்கள் இருபது பேர்களுக்கு பதவி உயர்வு தரப்பட்டு அவர்கள் மேஸ்திரியாக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு மேல் மொட்டை போடுவதையே தொழிலாகக்கொண்ட எங்களை முதன் முறையாக பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது கோவில் நிர்வாகம் என்று சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷத்துடன் குறிப்பிட்டனர். அதே போல கடந்த சனிக்கிழமை திருமலை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 60ஆயிரத்து 948பேர் மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். இதுவரை இவ்வளவு பேர் ஒரே நாளில் முடிகாணிக்கை செலுத்தியது இல்லை என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.