உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா: சிறப்பு அபிஷேகம்!

பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா: சிறப்பு அபிஷேகம்!

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மூன்றாம் நாள் விழாவில் 40 ஆண்டுகளுக்குப் பின் கனபாட வேதபாராயணம் நடந்தது.  கோவிலில் வைகாசி பெரு விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று  காலை சூரிய பிரபையில்  சுவாமி வீதியுலா நடந்தது. மதியம் பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. தொடர்ந்து 40 ஆண்டுகளுக்குப்பின் கனபாட வேதபாராயணமும், திருமுறை  பாராயணமும் நடந்தது.  ஸ்தாபன கலசங்களுக்கு சிறப்பு திரவிய அபிஷேகமும், புதுப்பட்டு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பல்வேறு  மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலியும், தீபாராதனையும் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (26ம் தேதி) 3ம் நாள்  ஊற்சவத்தில் காலை பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவு பூத வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !