உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பாலம்மன் வைகாசி விழா: பால்க்குடம் எடுத்து நேர்த்திக்கடன்!

பாம்பாலம்மன் வைகாசி விழா: பால்க்குடம் எடுத்து நேர்த்திக்கடன்!

திருவாரூர்: நீடாமங்கலம் பாம்பாலம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி   பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா அதிவிமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண் டிற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று காலை கோரையாறு படித்துறை பிள்ளையார் கோயிலிலிருந்து வான வேடிக்கைகள் முழங்கிட  பால்குடம், கரகம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலைச் சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும்  தீபாராதனை களுடம் நடந்தது. அதன் பின் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலாவைத் தொடர்ந்து அக்னி கப்பரை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !