ஆகம விதிப்படி செய்யப்படும் அபிடேக விதிகள்!
ADDED :3833 days ago
சுத்தசல நற்கந்த தயிலமா நெல்லியொடு
தூள்மஞ்சள் நன்கு றுமணத்
துகள்கவ்வி யத்தொ(டு) ஐந்தமுதுநெய் தீம்பால்
துலங்குததி தேன்க ரும்பில்
தத்திவரு சாறஞ்ச ருக்கரை யரம்பைமுதற்
சாற்றுகனி வகைய வுதகஞ்
சாருமிள நீரனங் கந்தமா தபனநீர்
தாராபி டேக முடனே
பத்திரோ தகமுயர் கவைச்சிருங் கோதகம்
பகர்பொன் னிரத்ன தோயம்
பைங்குசைத் தோயமுயர் சங்காபி டேகமுறை
பயிலும்ஆ கமம றைசொலும்
சித்தமுறை தயிலாந்த தபனதோ யந்தனைத்
தில்லைமுனி வரர்க ளாட்டும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.