வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :3782 days ago
விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக் கோயில் விழா மே 19 இரவு கொடியேற்றுத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடந்தது. 26ம் தேதி பொங்கல் விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கயிறு குத்து, அக்னி சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு 9 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர் வலம் வருதல் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் ஆகியோர் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்துள்ளனர்.