பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா!
ADDED :3883 days ago
கீழக்கரை : ரெகுநாதபுரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 ம் ஆண்டு திருக்கல்யாண விழா நடந்தது. காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டு, சண்முக கவசம், முருகநாம ஸ்தோத்திரங்களை பஜனை குழுவினர் பாடினர். முன்னதாக மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்திற்கு பின்பு, காலை 10.30க்கு திருமங்கல நாண் பூட்டப்பட்டது. திருநெல்வேலி சுத்தமல்லி சீனிவாசக சிவாச்சாரியார் தலைமையில் சுரேஷ் சிவாச்சாரியார், மணி, ஹரி குருக்கள், தெய்வச்சிலை அய்யங்கார், ஸ்ரீராமன் உள்ளிட்டோர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. மாலை 5 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.