நம்மாழ்வார் ஜெயந்தி: ஜூன் 7ல் ரத உற்சவம்!
பெங்களூரு: ஹலசூரு கவுதமபுரம் நம்மாழ்வார் சன்னிதியில், நம்மாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு, ஜூன் 7ம் தேதி ரத உற்சவம் நடக்கிறது. ஹலசூரு கவுதமபுரம் நம்மாழ்வார் சன்னிதியில், நம்மாழ்வாரின், 134வது ஜெயந்தி விழா, கடந்த 23ம் தேதி துவங்கியது. வரும் 31ம் தேதி வரை, தினமும் காலை, நாலாயிர திவ்யபிரபந்த சேவா காலமும், இரவு, வைஷ்ணவ பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருவாய்மொழி பன்னிசையும் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி காலை, இரவில், திருநட்சத்திர சாற்றுமுறையும்; 2ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, சொற்பொழிவும்; 3ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, பக்தி பாடல்களும்; 4ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, கருத்தரங்கமும் நடக்கிறது. ஜூன் 5ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சொற்பொழிவும்; 6ம் தேதி, இரவு 7:30 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், 11 ஆழ்வார்களுக்கும் மங்களாசாசனமும்; 7ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, நம்மாழ்வார் ரத உற்சவம் திருவீதி உலா புறப்படுகிறது. இதில், இஸ்கான் கோவில் பிரபுக்கள், மாதாஜிக்கள் பங்கேற்கின்றனர்.